Advertisment

சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசாரின் அதிரடி!

திருவள்ளூர் வழியாக ஆந்திராவுக்கு இன்று இரவு ஆயிரம் கிலோ ரேசன் அரிசி டாடா சுமோவில் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருவள்ளூர் சி.எஸ்.சி.ஐ.டி பிரிவு எஸ்.ஐ. டி.முத்தமிழ் செல்வன் மற்றும் போலீஸ் முத்துமாணிக்கம் ஆகிய இருவரும் அந்த டாட்டா சுமோ வாகனத்தை காரில் துரத்திச்சென்றனர். இருட்டிலும் பின்னால் போலீஸ் துரத்துகிறார்கள் என்று தெரிவிட்டதால் டாடா சுமோ அதிக வேகத்தில் சென்றது.

Advertisment

b

ஆர்.கே.பேட்டை அருகே சாலை கொஞ்சம் மோசமாக இருந்த இடத்தில் டாடா சுமோவை முந்திச்சென்று அந்த வாகனத்தை மறித்தபோது, அதற்குள் இருந்தவன் தப்பி ஓடிவிட்டான். அவன் லிங்கநாதன் என்பதும், ஆர்.கே.பேட்டை சமத்துவபுரம் அண்ணாமலையின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

லிங்கநாதனை கைது செய்ய போலீசார் அவனை தேடி வருகின்றனர்.

கடத்தல்காரன் கண்மூடித்தனமாக சென்றபோதும், அவனை துரத்தி முன்னே சென்று மறித்து, அரிசி மூட்டைகளை கைப்பற்றிய சி.எஸ்.சி.ஐ.டி போலீசின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

rice
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe