Advertisment

ஆர்.கே. நகரில் உருவாக்கப்பட்ட கரோனா மருத்துவ மையம்..! (படங்கள்)

Advertisment

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்துத்தரப்பு மக்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கரோனா பரவலைத் கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தீவிர ஊரடங்கானது அமலில் உள்ளது. அதே போல் தமிழகத்திலும் 24ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கின்ற போதிலும் பலரும்வெளியே சுற்றி திரிக்கின்றனர்.

Advertisment

இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தரப்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க மறுபுறம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். அதனால் பல மருத்துவமனைகளிலும் படுக்கைகள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் நோக்கில் தமிழக அரசானது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக அரசு சார்பில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ மையங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே. எபினேசர் அவர்கள் ஏற்பாட்டில் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் சுமார் 60 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளை இந்து அறநிலை துறை அமைச்சர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Chennai rk nagar sekarbabu udayanidhistlain
இதையும் படியுங்கள்
Subscribe