திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி முன்னிலையில், வத்தலக்குண்டு ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இணைச் செயலாளர் குமரேசன் தலைமையில் வத்தலக்குண்டு நகரச் செயலாளர் ராஜா, பட்டிவீரன்பட்டி நகரச் செயலாளர் லட்சுமண மூர்த்தி மற்றும் முகமது ரபிக், செந்தில், திருமுருகன், ராமு, திருப்பதி உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் காங்கிரஸில் இணைந்தனர்.
காங்கிரஸில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் அழகிரி, சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், ரஜினி ரசிகர்களை காங்கிரஸில் இணையச் செய்த வத்தலக்குண்டு நிர்வாகிகள் அஜீஸ், ஆடுசாபட்டி கண்ணன், சித்திக் உள்ளிட்ட அனைவரையும்கே.எஸ். அழகிரி வெகுவாக பாராட்டினார்.