திருச்சியில் மணல் கடத்தல் பிரச்சனை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல், கொலை முயற்சி தாக்கல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை குற்றவாளிகளுக்கு துணையாக இருப்பது அரசு அலுவலர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.ஐ. வருவாய் ஆய்வலாளராக யோகராஜன். இவர் வெளியூரிலிருந்து இங்கு பணிக்கு வந்தவர். இவருக்கு கூத்தைப்பார் வேங்கூர் செல்லும் வழியில் பத்தாலைபேட்டை என்கிற இடத்தில் அலுவலகத்துடன் கூடிய குவாட்ஸ் அரசாங்க சார்பில் கொடுத்திருக்கிறார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனால் இவர் இங்கு தான் தங்கி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவருடைய அறையில் தூங்க செல்லும் போது இவருடைய குவாட்ஸ் பின்புபுறம் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று போய் பார்த்த போது அங்கே இரண்டு மூன்று பேர் தண்ணியடித்து சலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆர்.ஐ. இது குடியிருக்கிற இடம் இங்கே வந்து குடிக்கலமா சத்தம் போட்டிருக்கிறார். உடனே அவர்கள் என்ன ஆர்.ஐ.னா பெரிய கொம்பா என அசிங்கமாக பேசிக்கொண்டே கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து அவரை குத்த வந்திருக்கிறார்கள். இவர் பயந்து போய் அலறியடித்து அங்கியிந்து ஓடியிருக்கிறார்.இவருடைய அலறல் சத்தம் கேட்டும் யாரும் அங்கே துணைக்கு வரவில்லை என்றவுடன் இவருக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது. அடுத்த நாள் இதே போன்று அதே இடத்தில் கையில் அரிவாலுடன் நின்று கொண்டு இருந்திருக்கிறார்கள். உடனே இது குறித்து ஆர்.ஐ. யோகராஜ் திருவரம்பூர் இன்ஸ்பெக்டர் மதனிடம் புகார் கொடுத்திருக்கிறார் ஆனாலும் இவர் இது பற்றி விசாரிக்க கூடா இல்லையாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்.ஐ. தன்னுடைய சங்கத்தின் மூலம் கலெக்டரிடம் சென்று அங்கு பணி செய்வது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தொடர்ந்து இதே போன்று மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையும் குற்றவாளிகளுக்கு துணையாக இருக்கிறார்கள். என்று புகார் சொன்னவுடன் அதிர்ச்சியடைந்த கலெக்டர் உடனே எஸ்.பியிடம் பேசி அந்த இரண்டு பேரையும் ரிமாண்ட பண்ண சொல்லியிருக்கிறார். கலெக்டர் பக்கம் இருந்து பிரஷர் வந்தவுடன் உஷார் ஆனா இன்ஸ் மதன் குற்றவாளியான வெங்கடேஷன் மற்றும் முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது பண்ணுவதை கூட வெளியே சொல்லாமல் அவர்களை ஜாமீனில் தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காரணம் அவர் இரண்டு பேரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் இன்ஸ் மதன் பத்தாலைபேட்டை, வேங்கூர், திருவரம்பூர் ஆகிய பகுதிகள் மணல் கொள்ளை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திருவரம்பூர் பகுதியில் கடந்த 3 வருடங்களாக இன்ஸ்பெக்டராக இருப்பவர் மதன். இவர் மணல் கொள்ளையர்கள் என்றால் மாட்டுவண்டியில் மணல் எடுப்பவர்களே பிடித்து வழக்கு போட்டுக்கொண்டிருப்பார். ஆனால் லாரிகளில் மணல் கடத்துபவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பார் என்கிறார்கள் அந்த பகுதியில் விவரம் அறிந்தவர்கள். மக்களுக்காக வேலை செய்ய வேண்டிய ஆர்.ஐ.யே உயிருக்கு பயந்து கலெக்டரிடம் புகார் சொல்லி தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை என்றால் பொதுமக்களுக்கு காவல்நிலையில் கிடைக்கும் மரியாதையே உதாரணம்.