Advertisment

நதிநீர் பங்கீடு- கேரளாவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை!

River water sharing - Third phase of talks with Kerala!

தமிழ்நாடு- கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (17/09/2021) மாலை 04.00 மணிக்கு தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுப்பணித்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர். ஆனைமலையாறு- நல்லாறு அணைத் திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

Advertisment

அதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணை தொடர்பாகவும் இரு மாநில அரசின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Officers water Tamilnadu Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe