கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் தென் பெண்ணை ஆற்றில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி ரூ 39 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிக்கு ஆற்றில் மணல் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மேம்பால பணிக்கு என்று கூறி திருட்டுத்தனமாக அரசு அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது.

Advertisment

 River sand theft for government work!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதையடுத்து மேல் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பாலாஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டகிராம மக்கள் தென்பெண்ணை ஆற்றுக்கு திரண்டனர். அங்கு மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்ஆகியவை சிறைப்பிடித்துபோராட்டம் நடத்தினர்.அதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.

Advertisment

 River sand theft for government work!

அதனை தொடர்ந்து தாசில்தார் உதயகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.