Advertisment

மூன்று முறை பிக்பாஸ் 2 டைட்டில் வென்ற ரித்விகா!!

bigbass

Advertisment

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக பிக்பாஸ் 2 நூறு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுஇறுதியில்கூடுதலாக 7 நாட்கள் நீடிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வந்தனர். அந்த வகையில் 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, பிக்பாஸ் வீட்டில் ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டி வரை சென்றனர்.

bigbass

இறுதிப் போட்டிக்கு சென்ற 4 போட்டியாளர்களில் இருவர் வெளியேறியதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகிய இருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். அந்த இருவர்களில் ரித்விகாவிற்குபிக்பாஸ் 2 டைட்டிலை கமல்ஹாசன் அறிவித்தார். ஆனந்த கண்ணீருடன் அந்தபிக் பாஸ் டிராபியை பெற்றுக்கொண்டார் ரித்விகா.

Advertisment

ஆனால் அவர் பிக்பாஸ் டைட்டில் பெரும் தகுதியை மூன்று முறை அந்த ஒரே நிகழ்ச்சியில் நிரூபித்துள்ளார். ஒரு டாஸ்க்கிற்காக ரித்விகா தனது வலியையும் பொருட்படுத்தாமல், கையில் பிக் பாஸ் டாட்டூ போட்டுக் கொண்டார் அதுதான் அவர் முதன்முதலாக பிக்பாஸ் டைட்டில் வென்றதற்கு சமமானது.அதேபோல்2வது முறையாக தெலுங்கு நடிகர் விஜய தேவரகொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய 4 பேரிடமும் அந்த பிக் பாஸ் டிராபியை கொடுத்தார். அப்போதும் ஆனந்த கண்ணீருடன் அந்த ட்ராபியை ஏற்றுக்கொண்டார்.

இறுதியாகதொடர்ந்து 3வது முறையாக நேற்றைய இறுதிப் போட்டியின் போது கமல்ஹாசன் கையால் பிக் பாஸ் டிராபியை ஆனந்த கண்ணீருடன்பெற்றுக்கொண்டார். இப்படி ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை டைட்டில் வென்று காண்பித்து அசத்தியுள்ளார் ரித்விகா.

bigboss rithvika title winner
இதையும் படியுங்கள்
Subscribe