Rising GST! Press workers in pain!

Advertisment

அச்சக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களின் அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதத்தின் விலை ஏற்றத்தால் தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. ஆகவே காகித ஆலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதேபோன்று அச்சுத் தொழிலின் மூலப்பொருளாக விளங்கும் மை, கெமிக்கல், பாலி மாஸ்டர் போன்றவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே அச்சுத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. பின்னர் 12 சதவீதமாகவும், கடந்த அக்டோபர் முதல் 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்த படி 5 சதவீத ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு ஆவண செய்ய வேண்டும். அச்சுத் தொழிலுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது சங்கத்தின் செயலாளர் மோகன், பொருளாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.