Advertisment

பருத்தி நூல் விலை உயர்வு.... பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

Rise in cotton yarn .... Chief Minister MK Stalin wrote a letter to the Prime Minister!

பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாகத் தடுத்திட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/05/2022) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும் அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாகச் சுட்டிக்காட்டி- மாண்புமிகு முதல்வர் அவர்கள் “பருத்தி நூல் விலை உயர்வை இடையூறுகளை உடனடியாக விரைவில் தடுத்திடவும், களைந்திடவும்” நெசவாளர்களுக்கு ஏற்படும் மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்றைய தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில் மிக முக்கியமாக தொழில்துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலையளிப்பதாகவும், பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது. ஆகவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் நாளைய தினம் (18/05/2022) சந்தித்து நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று நேரில் வலியுறுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மத்திய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe