தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 (Right To Information Act -2005) அனைவரும் அறிய வேண்டிய சட்டங்களில் ஒன்று ஆகும். இந்த சட்டத்தை பயன்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் நேரடியாக கேள்வி எழுப்ப மக்களுக்கு அங்கீகாரத்தை வழங்கியது தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது மிகையாகாது. இச்சட்டம் ஆனது அரசின் நலதிட்டங்கள் குறித்த செலவின தகவல்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த கேள்விக்களை பொதுமக்கள் அரசிடம் எழுப்பலாம்.மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்ப இரண்டு வழிமுறைகள் உள்ளது. இதை ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்.

Advertisment

rti online complaint

மத்திய அரசின் சமந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது மக்கள் கேள்வி எழுப்ப விரும்பினால் இணைய தள வழியின் மூலம் மிக எளிமையாக விண்ணப்பிக்கலாம். இதற்கான இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய தள முகவரி : https://rtionline.gov.in/ ஆகும். இந்த இணையதளத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் நிரந்தர கணக்குகளை உருவாக்க வேண்டும். இதில் பதிவு செய்ய வேண்டியவை மனுதாரர் பெயர் , தந்தை பெயர் , வயது , முகவரி , கல்வி தகுதி , தொலைப்பேசி எண்கள் , ஈ - மெயில் முகவரி , பயனாளர் பெயர் (USER NAME) , ரகசிய குறியீடு எண்கள் (PASSWORD) உள்ளிட்டவை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு ரகசிய குறியீடு எண் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரிக்கு வரும். இந்த ரகசிய குறியீட்டை இணையதளத்தில் குறிப்பிட்டால் RTI இணையதளத்தில் மனுதாரரின் நிரந்தர கணக்கு "Activate" ஆகும். தங்களுக்கென்று User Name , Password கிடைக்கும். இதனை உள்ளீட்டு " SUBMIT REQUEST " என்ற "option" யை கிளிக் செய்ய வேண்டும்.

Advertisment

rti report login

பின்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த துறையின் கீழ் விண்ணப்பிக்கிறோமோ ? அந்த துறையை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் " Select " செய்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "ரிசர்வ் வங்கியை" Select செய்து பின்னர் மனுதாரர் தனது சுயவிபரங்கள் சரியாக விண்ணப்பத்தில் உள்ளதா என படித்து பார்த்த பின்னே தான் எழுப்ப உள்ள கேள்விகளை "ஆங்கிலத்தில்" அல்லது " ஹிந்தியில் " கேட்கலாம். இந்த விண்ணப்பத்தில் கேள்விகளாக மனுதாரர் கேட்கக்கூடாது. மனுதாரர் பணிவுடன் கேள்விகளை எழுப்ப வேண்டும். பின்னர் " SUBMIT " பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா 10 ரூபாய் இணைய வழி பணபரிமாற்றம் மூலம் செலுத்த வேண்டும். அதன் பிறகு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதி இணைய வழியில் காண்பிக்கும் . இந்த ரசீதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தற்கான "Application No" பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈ - மெயிலுக்கு குறுந்தகவல் வரும். இதனை மனுதாரர் சேமித்து வைக்க வேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதன் பிறகு விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு அறிவது ?

RTI இணையதளத்தின் மேலே " VIEW STATUS " என்ற " Option " கிளிக் செய்து ." Application No" மற்றும் " Email Id " குறிப்பிட்டு " Submit" செய்தால் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். இந்த இணைய தளத்தில் Register, Pending, Disposed என்ற options இடம் பெற்றிருக்கும். பின்னர் மனுதாரர் அனுப்பிய விண்ணப்பத்திற்கு சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் பதில் மனுவை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்புவார்கள். இந்த பதில் மனு மனுதாரருக்கு திருப்தி இல்லையெனில் பதில் மனு கிடைத்த 30 நாட்களுக்குள் மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம். இந்த வசதியும் இந்த இணைய தளத்தில் உள்ளது. மத்திய அரசின் சமந்தப்பட்ட தகவல்களை இணைய தளம் மூலம் எளிதில் பெறலாம். மாநில அரசு சமந்தப்பட்ட தகவல்களை கடிதம் மூலம் மட்டுமே பெற முடியும். இதற்கான இணையதள சேவையை தமிழக அரசு உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கினால் அரசின் செயல்பாடுகள் வேகம் பெறும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

பி. சந்தோஷ் , சேலம்