திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 88 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் தொடர்ந்து 70 மணி நேரமாக மீட்புப்பணி தொடர்கிறது.

Advertisment

rig machine started working again

இந்நிலையில் ரிக் இயந்திரம் மூலமாக துளையிடுவது நிறுத்தப்பட்டு போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில், போர்வெல் இயந்திரத்தை கொண்டு துளைகள் இடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் தற்போது ரிக் இயந்திரத்தை பயன்படுத்தி இந்த துளைகள் ஒரு மீட்டர் அகலமுடைய, தீயணைப்பு வீரர்கள் இறங்குவதற்கு ஏதுவான அகலமுடைய குழியாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.இடையே லேசான மழை பெய்த நிலையிலும், ரிக் இயந்திரம் துளையிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.