Skip to main content

அண்ணன் தம்பி தகராறில் பசுமையான நடவு வயலை கறுகவைத்த அவலம்!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி ஊராட்சி நுகத்தூரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் தேவூர் இரட்டை மதகடியை சேர்ந்த பக்ரி முகமது என்பவரின் பண்ணையில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்ததற்காக சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகை சாகுபடிக்காக கொடுத்துள்ளார் பக்ரிமுகமது. பக்கிரிசாமியும் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சாகுபடி செய்து வந்திருக்கிறார்.

 

 Rice-Pesticide-Spray-Eradication-near-Nagai

 



பின்னர் அந்த நிலத்தை பக்கிரிசாமியிடமே விலைப்பேசி  பக்ரி முகமது விற்பனை செய்துள்ளார். பக்கிரிசாமியும் நிலத்திற்கான தொகையை பக்ரிமுகமதுவிடம் கொடுத்துவிட்டு நிலத்தை தனது மருமகள் பெயரில் கடந்த ஆண்டு  பத்திரப் பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் பக்கிரிசாமியின் தம்பி வேணுகோபால் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தேவூரில் குடியிருந்து வருகிறார். அவர் அந்தநிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை செய்துள்ளார், இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. 

இதற்கிடையில் கடந்த ஆண்டு மூன்று ஏக்கரில் விவசாய சாகுபடி செய்திருந்த நெற்பயிரில் எரி களைக்கொல்லி மருந்தை தெளித்து வேணுகோபால் பயிர்களை கறுகசெய்திருக்கிறார். ஆத்திரமடைந்த பக்கிரிசாமியும் அவரது மகன் பாண்டியனும் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டும்  அதே போலவே சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களுக்கு எரி கலைக்கொள்ளி அடித்து கறுகவைத்துள்ளனர். 

மனமுடைந்துபோன பக்கிரிசாமியும் அவரது மகன் பாண்டியனும் விவசாய சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களுடன் சென்று நாகை மாவட்ட எஸ்,பியிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அவலம் அந்த பகுதியின் விவசாயிகளின் மத்தியில் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் உழைக்கும் விவசாயிகள் இயக்கம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Farmers Movement supporting India Alliance

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் என்று நான்கு  கட்சிகளும் நான்குமுனை போட்டியாக தங்களது கூட்டணி கட்சிகளோடு தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். பல்வேறு சிறு இயக்கங்களும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.

உழைக்கும் விவசாயிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, சிறு, குறு, குத்தகை விவசாயிகள்  மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து  உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக, ‘மார்க்சிய வழிகாட்டுதலை உள்ளடக்கிய   அம்பேத்கரிய சித்தாந்த’ அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது”.

இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள,  18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வரையறுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் கடந்த 25 – ஆம் தேதி இயக்க மாநிலத் தலைவர் சுந்தர் தலைமையில் இயக்க உயர் மட்டக்குழு கூடி, நாடு சந்திக்கும் வரலாறு காணாத இன்றைய பெரும் சவால்கள் அதன் விளைவாக குறிப்பாக உழைக்கும் விவசாயிகளின் ஒட்டுமொத்த  வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தது

இந்திய ‘அரசியல் சாசனச் சட்டத்தின்’ அடிப்படை அம்சங்களான – “சனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, பெண் சமத்துவம், மாறுபடும் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அனைத்து தரப்பினருக்கும் உள்ள அரசியல் உரிமை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிராக, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியாவையும் திறந்துவிடுதல், மத அடிப்படையில் பெரும்பான்மைவாதம் பேசி நாட்டைப் பிளவு படுத்தி, வெறுப்பு அரசியலை வளர்த்து, மாநில அரசுகளின் உரிமை மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தை மறுத்து, நாட்டின் முதுகெலும்புகளான உழைக்கும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை மொத்தமாக புறந்தள்ளி,’ இந்த பழம் பெரும் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் சிதைக்கும்” பாசிச ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் சக்தியான  பிஜேபி  மற்றும்  அதன் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், நமது வாக்கு மற்றும் ஆதரவு இல்லை. 

மேற்காணும் அனைத்து  நாசகரப்போக்கையும் எதிர்த்து, இந்திய அரசியல் சாசனச்சட்ட விழுமியங்களை மதித்து, இந்தியாவின் சனநாயகக்  கொள்கை கோட்பாடுகள், மற்றும் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய உழைக்கும்  வர்க்கத்தின் நலன்   காக்கப்பட ஒன்று திரண்டுள்ள இந்தியா  கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. 

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.