A review petition will be filed if the Sterlite affair is required

Advertisment

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனஅமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது தமிழகஅரசு. அதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரிதேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில்ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்றுபசுமை தீர்ப்பாயம்உத்தரவிட்டது. அந்த பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து செய்யப்பட்டமேல்முறையீட்டு வழக்கில்ஆலையை திறக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளைஉத்தரவிட்டது.அதனைஅடுத்துஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில்ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவைநிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும்பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

Advertisment

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.