Advertisment

தரங்கம்பாடி கோட்டையை புதுப்பிக்க டென்மார்க் நாட்டவர் ஆய்வு

t

தரங்கம்பாடியில் பழுதடைந்த நிலையில் உள்ள டேனிஷ் காலத்து தளபதிகள் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பிக்க டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, டென்மார்க் நாட்டிலுள்ள தரங்கம்பாடி நலச்சங்கத் தலைவர் பவுல்பீட்டர்சன், துணைத் தலைவர் நுட்ஹலேஸ் ஆகியோர் அண்மையில் தரங்கம்பாடிக்கு வந்து, டேனிஷ் காலத்து தளபதிகள் வாழ்ந்த இல்லத்தைப் பார்வையிட்டனர்.

Advertisment

நாகை மாவட்டம் பொறையாறு அருகில் உள்ளது தரங்கம்பாடி, அங்கு இருக்கும் டேனிஷ்கோட்டை வரலாற்று சுற்றுலா தளமாக விளங்கிவருகிறது, அந்த கோட்டை கடல் அறிப்பாலும், போதுமான பராமரிப்பின்மையாலும் சிறுக,சிறுக சிதைந்துவருகிறது. இந்தநிலையில் டென்மார்க் தரங்கம்பாடி நலச்சங்கம் புதுபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Advertisment

தரங்கம்பாடி வந்தவர்கள் செய்தியாளர்களிடம்," டென்மார்க் நாட்டவர் வியாபாரத்துக்காக 1620-ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர். அவர்கள் வந்த 400-ஆவது ஆண்டு இன்னும் 2 ஆண்டுகளில் வர இருக்கிறது. இதையொட்டி, இந்திய- டென்மார்க் நாட்டு கலாசாரத்தைப் பேணி காக்கின்ற வகையிலும், இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் வகையிலும் 400-ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தவுள்ளோம்.

இதற்காக, டென்மார்க் நாட்டின் எல்சிநோர் நகரில் உள்ள அரண்மனையில் வருகிற நவ. 26-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இருநாட்டு தூதர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் தரங்கம்பாடி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரும், நான்கு மாணவியரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விழாவையொட்டி, தரங்கம்பாடியிலுள்ள டேனிஷ் காலத்து தளபதிகள் வாழ்ந்த இல்லம் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. கொல்கத்தா செரும்பூரில் டேனிஷ் அரண்மனை மற்றும் தேவாலயத்தை வடிவமைத்த இரண்டு கட்டடக் கலை நிபுணர்கள் தரங்கம்பாடிக்கு வந்து, இந்த இல்லத்தை பழைமை மாறாமால், புதுபிக்க வரைபடம் தயாரிக்கவுள்ளனர். பின்னர் இதற்காக டேனிஷ் அரசிடம் நிதி உதவி பெற்று, தளபதிகள் இல்லம் புதுப்பிக்கப்படும்". என்றனர்.

tharangampadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe