நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். நேற்றுதான் இது திருக்கோவிலின் ஆடி தபசு காட்சி நிறைவுபெற்றது. இந்த ஆலயத்தின் மிகப்பெரிய கோபுரம் தென் மாவட்டத்தில் பிரபலமானது. ஆலயத்தில் இன்று காலை சுதந்திரதின விழா தேசியகொடியேற்றம் நடைபெற்றது. நிர்வாகத்தின் சார்பில் கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்ட தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருக்கிறது.

nellai

Advertisment

Advertisment

அந்தக்கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டிருந்தது. கோபுரம் மிகவும் உயரம் என்பதால் சாதாரணமாக யாரும் அதை பார்க்க முடியவில்லை. அருகிலிருந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் தேசிய கொடி தலைகீழாக பறப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனே கோவில் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினர்.

மதியம் 12 மணிக்கு பிறகு அந்த கொடி நேராக பறக்கவிடப்பட்டது. இது நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.