
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்இரண்டாம் நாளாக,தமிழகம் முழுவதும்ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது 10 அம்ச கோரிக்கைகளான, “அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய்த் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிடவேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து அனைவருக்கும் பழைய நிலையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்” உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 17 ஆம்தேதிமுதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று, 2-வது நாளாக நீடித்தது. ஈரோடு மாவட்டத்தில் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த வருவாய்த் துறையினரும்ஈடுபட்டுள்ளனர். இதனால், ஈரோடு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மட்டுமில்லாமல் மாவட்டம் முழுக்க உள்ள வருவாய்த் துறை அலுவலகங்கள்பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தொடர் 2ஆம் நாள் போராட்டத்தினால், நிர்வாகப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளது. இந்த அலுவலகங்களில் நடைபெற வேண்டிய வேலைகள் நடக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)