/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_142.jpg)
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவதுநாளாகத்தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அலுவலக பணிகளைப் புறக்கணித்து ஆட்சியர் அலுவலக முகப்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது, இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படை பணி வழங்குதல் 5% குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வருவாய் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் யாரும் இல்லாததா சூழலில் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்குபொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக எடுத்துவந்தபோது, அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளதால் அனைவரும்ஏமாற்றுத்துடன்டன்திரும்பிசென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)