Advertisment

மாணவி சோபியாவை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

மாணவி சோபியாவை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில்,

#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.

Advertisment

நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும்.

மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

sophia tamilisai mk stalin
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe