/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3910.jpg)
திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தையை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக 8 ஆண்டுகள் கழித்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஸ்கரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையில் வாகன ஓட்டுனரான மணிகண்டன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கொலையான பாஸ்கரனின் மகன் விஜய் என்பவர் கருதி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் கொலை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக விஜய் தன்னுடைய நண்பர்களை சேர்த்து மணிகண்டனை கடத்தியுள்ளார்.
பின்னர் மணிகண்டனை கொடூரமாக கொலை செய்து தந்தை பாஸ்கரனை கொலை செய்து வீசிய அதே இடத்தில் மணிகண்டனின் உடலை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையில் ஈடுபட்டவர்கள் நான்கு பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த நான்கு பேரில் ஒருவர் 17 வயது சிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலைக்கு பழிக்கு பலியாக நிகழ்ந்தேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)