Advertisment

கரோனா சிகிச்சை முடிந்த ஒரே வாரத்தில் பணிக்கு வந்த தேர்தல் அலுவலர்... சக அலுவலர்கள் அச்சம்!

The returning officer who came to work within a week of the completion of the corona treatment ... colleagues fear!

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியிலும் பதிவானவாக்குப் பெட்டிகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து 'நெகடிவ்' சான்றிதழுடன் வரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவசரஅவசரமாக மாற்று அலுவலர்கள், முகவர்கள் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு பரிசோதனை என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அதேபோல தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர், சார் ஆட்சியர் பாலச்சந்தர் ஐஏஎஸ்க்கு கடந்த வாரம் 23 ந் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் 10 நாட்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். கரோனா சிகிச்சை முடிந்து குறைந்தது 14 நாட்களாவது தனிமையில் இருக்க வேண்டும் என்ற விதியை காற்றில்பறக்கவிட்டு, சிகிச்சை தொடங்கி 10 நாட்களிலேயே தேர்தல் நடத்தும் அலுவலர் பணிக்கு வரவைத்திருப்பது சக அலுவலர்களுக்குஅச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே பட்டுக்கோட்டை சார் ஆட்சியரை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, மாற்று அதிகாரியை நியமிக்க கேட்டுள்ளனர். இதேபோல பல தொகுதிகளிலும் கடைசி நேரத்தில் பல சிக்கல்களை கரோனா ஏற்படுத்தியுள்ளது.

tn assembly election 2021 Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe