திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது தஞ்சாவூர் ஒரத்தநாடுபகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.