Advertisment

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்க!- மக்களை மிரட்டும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்

தேர்தல் முடிந்தும் கூட இன்னும் தேனி மாவட்டத்தில் தேர்தல் பரபரப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிரஸ்சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்செல்வன் உள்பட சில கட்சிகளும் சுயேட்சைகளும் போட்டி போட்டனர்.

Advertisment

ops theni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இருந்தாலும் அதிமுக, காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையேதான் தேர்தல் களம் சூடு பிடித்து வந்தது. இந்த நிலையில்தான் தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தரப்பினர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காள மக்களை பணத்தால் அடித்து ஓட்டு வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டம் நகரம் ஒன்றியம் கிளைப் பொறுப்பாளர்கள் மூலமாக பணப்பட்டுவாடா பகிரங்கமாகவே நடந்தது.

அதை தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை இந்தநிலையில்தான் கடந்த 18ஆம் தேதி தேர்தலும் வழக்கம் போல் நடந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தும்கூட எதிர்பார்த்த அளவு வாக்காளர்கள் ஓபிஎஸ் மகனுக்கு சரிவர ஓட்டு போடவில்லை அதுலையும் 75% தான் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. அதன் மூலம் பணம் வாங்கியவர்கள் சரிவர ஓட்டு போட வில்லை அதனால் தோல்வியை சந்தித்து விடுவோமா என்ற எண்ணம் ஓபிஎஸ்க்கும்,அவரது மகன் ரவீந்திரநாத்குமார் காதுக்கு எட்டியதின் பேரில் டென்ஷனாகி விட்டனராம்.

அதிலேயும் உசிலம்பட்டி தொகுதியில் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பரிசு பெட்டிக்கு தான் விழுந்திருக்கிறது என்ற தகவலும் ஓபிஎஸ்-க்கு போயிருக்கிறது.

அதன் அடிப்படையில் தான் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களைத் தூண்டிவிட்டு ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காள மக்களை ஆய்வு செய்ய வலியுறுத்தி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் உசிலம்பட்டி இரண்டாவது வார்டில் உள்ள பாக்கியத்திடம் பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலர் சென்று பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடவில்லை என்று சத்தம் போட்டு இருக்கிறார்கள். அதை கண்டு டென்ஷன் அடைந்த பாக்கியமோ நான் ஒன்னும் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என் வீட்டுக்காரர் இடம் அடைக்கலம் ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்தார். ஆனால் நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம் அப்படி இருந்தும் இரட்டை இலைக்கு ஓட்டு போடவில்லை என்று என்னிடம் கட்சிக்காரர்கள் சத்தம் போட்டார்கள் அதனால்பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டோம்.

ops theni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இப்படி தேவையில்லாமல் என் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டனர் என்று பகிரங்கமாகவே ஓபிஎஸ் தரப்பு மேல் குற்றம் சாட்டினார். அதேபோல் ஒபிஎஸ் தொகுதியின போடி தொகுதியில் உள்ள 28, 29 வார்டுகளில் பெரும்பாலான மக்கள் ஓட்டுப் போட போகவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஓட்டு சாப்தாவை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஏன் ஓட்டு போட வரவில்லை அதனால்ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுங்கள் என வெளிப்படை

யாகவே அந்த மக்களிடம் கேட்டு வாங்கி வருகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் ஓபிஎஸ் மேல் பெரும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அதுபோல் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்திலும் பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலர் வார்டு வாரியாக ஓட்டு சாப்தாவை கையில் வைத்துக்கொண்டு ஓட்டுப்போட வராத மக்களை மிரட்டி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வருகிறார்கள். இப்படி கம்பம் ஆண்டிபட்டி, தேனி, கூடலூர் உள்பட தொகுதி முழுக்கவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓட்டு சாப்தாவுடன் களமிறங்கி ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று பொது மக்களை மிரட்டி வாங்கி வருகிறார்கள். இதனால் தொகுதி முழுக்கவே ஓபிஎஸ் மேல் பெரும் அதிருப்தி அலையும் வீசி வருகிறது.

vote Theni elections ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe