
தமிழினத்தின் மூத்தப்பெருங்குடி என்று குறிப்பிடப்படும் இனத்தின் தலைவர், அந்த இனத்தின் அறிவாற்றலின் பிறப்பிடம், பண்பாட்டின் பாசறை, அவர்களின் விளைநிலம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட ஒப்பற்றத் தலைவர், உரிமைப் போராளி, இராவ்பகதூர், திவான்பகதூர், தாத்தா ரெட்டமலை சீனிவாசனின் 162வது பிறந்தநாள் விழா நேற்று (07.07.2021) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சி, பறையர் பேரவை, திராவிட முன்னேற்ற கழகம், ரெட்டமலை சீனிவாசன் பறையினர் அறக்கட்டளை ஆகியவைசார்பில் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர்கள் அருள் தலைமையில் தாத்தா ரெட்டமலை சீனிவாசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் சந்தனமொழி, பெரியசாமி, மாரிமுத்து, சரவணன், தினேஷ், கலை,திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் நிர்வாகி விக்டர், திருச்சி மாவட்டப் பறையர் பேரவை நிர்வாகிகள் மாரியப்பன், சரவணன், ரெட்டமலை சீனிவாசன் பறையினர் அறக்கட்டளை நிர்வாகிகள் ராதா, பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)