சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும்ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. கரோனாகாரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால்மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டநிலையில்,அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மதிப்பூதியமும்தற்போது வழங்கப்படாது எனவும் அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில்அதேபோல்மற்றொரு உத்தரவையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள் கரோனாகாரணமாக வாழ்வு சான்றிதழ் தரநேரில் வர வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ள தமிழக அரசு,ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும்குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரில் வந்து சான்றிதழ் அளிக்கவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும்தெரிவித்துள்ளது.