Advertisment

போராட்டத்தில் இறங்கிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள்; குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை (படங்கள்)

Advertisment

8 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇன்று (27/08/2024 ) மாநிலம் முழுவதும் 9 மையங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

Advertisment

சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். இதனால் திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

Chennai police protest Transport
இதையும் படியுங்கள்
Subscribe