Advertisment

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை; ஈரோட்டில் பரபரப்பு

Retired sub-inspector passed away in Erode

ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் அடுத்த செட்டியப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

Advertisment

இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.இரு மகன்களில் ஒரு மகன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். மற்றொரு மகனாகிய வாசுதேவன் திருமணமாகி குடும்பத்துடன் வெள்ளி திருப்பூரில் வசித்து வருகிறார். தற்போது நடேசன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகிய இருவரும் ரொட்டி பாளையத்தில் குடியிருந்து அங்குள்ள 4.5 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் நடேசன் வீட்டிலிருந்து தோட்டத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் நடேசனை வழிமறித்து அரிவாள் மற்றும் மண்வெட்டியால் பயங்கரமாக அவரைத்தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த நடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த பவானி டிஎஸ்பி அமிர்த வர்ஷினி,அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தினர். நடேசன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe