ஓய்வு பெற்ற காவல் அதிகாரி படுகொலை; இருவர் சரண்

 Retired police officer incident; two surrender

நெல்லையில் ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாநகர் காட்சி மண்டபம் அருகே இன்று (18/03/2025) காலை 5:30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜில் என்பதும், காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் என்பதும் தெரிந்தது.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வக்புக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிந்துள்ளது.மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஜாகிர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ரம்ஜான் நோன்புக்காக இன்று வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடித்துவிட்டு சென்றபோது மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜில் படுகொலை செய்யப்பட்டுள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் அக்பர்ஷா, கார்த்திக் என்ற இருவர் நெல்லை மாவட்ட நான்காவது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

incident
இதையும் படியுங்கள்
Subscribe