Advertisment

ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏழு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், 22 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.