Skip to main content

“அடுத்த முப்பது நாட்களில் முடிவுகள் வெளியாகும்” - சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

"Results will be released in the next 30 days" - Health officials announced

 

கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு, சமூகத்தில் எந்த அளவில் உள்ளது என்பதைக் கண்டறிய, மாநிலங்கள் முழுவதும் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வை நடத்திவருகிறது. அதில் முதல் ஆய்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஆய்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.

 

முதல் ஆய்வில் 31% பேருக்கும், இரண்டாவது ஆய்வில் 23% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என தெரியவந்தது. இந்நிலையில், 3வது கட்ட ஆய்வை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை கடந்த வாரம் தொடங்கி, 46 சுகாதார மாவட்டங்களில் 888 நோய் பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டு மாதிரிகளைச் சேகரித்துள்ளது.

 

அதில் மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 960 மாதிரிகளும், புதுக்கோட்டையில் 240 மாதிரிகளும், கரூரில் 390 மாதிரிகளும், பெரம்பலூரில் 210 மாதிரிகளும், அரியலூரில் 270 மாதிரிகளும், தஞ்சையில் 840 மாதிரிகளும், திருவாரூரில் 420 மாதிரிகளும், நாகையில் 300 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளின் முடிவுகள் அனைத்தும் அடுத்த முப்பது நாட்களில் வெளியாகும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம்!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Appointment of Tamil Nadu Director of Medical Education

 

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக மருத்துவர் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த மருத்துவர் ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள மருத்துவர் ஜெ.சங்குமணி, பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார். 

 

 

 

 

Next Story

குரங்கு அம்மை பரவல்; விமான நிலையங்களுக்கு சுகாதாரத்துறை புதிய உத்தரவு!

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

ரகத

 

குரங்கு அம்மை நோய் தொடர்பாக விமான நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

 

உலக நாடுகளைக் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்றின் வரலாறு 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ், முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 நாடுகளில் 120க்கும் மேற்பட்ட நபர்களுக்குக் குரங்கு அம்மை பரவியுள்ளது.

 

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று அனைத்து விமான நிலையங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி  " குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்திட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் பயணிகளுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.