Advertisment

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Restrict people's movement - Central government directs to state governments

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல்15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 144 தடை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும்நிலையில்144 தடை உத்தரவை மீறி வெளியே சென்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், நகரங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து செல்வதை கட்டுப்படுத்தவும், இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்ற கூறுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இனிஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை நடவடிக்கையைமேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

state governments Central Government police corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe