Skip to main content

திருச்சியில் வீரவணக்க நாள்; மறைந்த காவலர்களுக்கு மரியாதை!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

 Respect for the late guards

 

காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் வீரவணக்கம் செலுத்தினர்.

 

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்' என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 Respect for the late guards

 

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மத்திய மண்டல காவல்துறை தலைவர், துணை தலைவர், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் பங்கு கொண்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

 

இந்நிகழ்ச்சியில் துப்பாக்கி முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். வீர வணக்க நாளை முன்னிட்டு போலீஸார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்