Advertisment

குருகுலத்தில் “கலைஞருக்கு” மரியாதை...

 Respect for

Advertisment

திமுகவின் முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர்கருணாநிதியின் 97 -வது பிறந்தநாள் திமுக சார்பில் தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டது. திமுகவினர் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படியே தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே எளிய முறையில் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கலைஞர் இறுதி வரை அறிவிப்பு செய்தது தந்தை பெரியார் பிறந்த ஈரோடுதான் எனது குருகுலம் என்று, அப்படி கலைஞரின் குருகுலமான ஈரோட்டில்,

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி மணல்மேட்டில் உள்ள அக்கட்சி அலுவலக முகப்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி அலுவலக முதல் மாடியில்உள்ள கலைஞரின் சிலைக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க. துணைபொதுச் செயலாளர்களான சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, கொள்கைபரப்பு துணை செயலாளர் சந்திரகுமார் உட்பட நிர்வாகிகளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

கலைஞர் சிலைக்கு மட்டுமல்லாமல் கலைஞரின் வழிகாட்டிகளான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிலைகளுக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

birthday kalaingar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe