Advertisment

அண்ணா பிறந்தநாள்; தமிழ்நாடு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை (படங்கள்)

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். உடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் எம்.பி சு. வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் ஸ்டாலின், "தம்பி! உன்னைத்தான் தம்பி..." என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் - ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் - நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்!” என பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதேபோல்ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள அண்ணா சிலைக்கு தமிழகஅமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியம், பொன்முடி, கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோரும் எம்.பி தயாநிதி மாறன் மற்றும் பல அரசு அதிகாரிகள்கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe