27-ந்தேதி நடைபெறும் பாரத் பந்த்தை வெற்றிகரமாக நடத்துவது என விவசாயச் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!

Resolution of the meeting of the farmers' association to successfully do struggle on  the 27th ..!

சிதம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை தேரடி தெருவில் உள்ளவிவசாயச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குஇந்தியத்தேசிய காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், ‘விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மூன்று வேளாண்சட்டங்களைத்திரும்பப் பெற வேண்டும். இலவசமின்சாரத்தைப்பறிக்கும் மின்சார ஒழுங்குமுறைசட்டத்தைத்திரும்பப்பெற வேண்டும்’ உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 10மாதங்களாகப்போராடி வருகின்றனர்.

இதனை ஆதரித்து விவசாயசட்டங்களைத்திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் விரோதசட்டங்களைத்திரும்பப் பெறவும், பொதுத்துறைநிறுவனங்களைப்பாதுகாத்திடவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும்,பெட்ரோல்,டீசல்,கேஸ்விலைஉயர்வைத்திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்சார்பாகச்செப்டம்பர் 27 அன்று நாடு தழுவியபாரத்பந்த்போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு, கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும். செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் தெருமுனை கூட்டங்கள் நடத்திட வேண்டும். அனைத்து பகுதி மக்களின் ஆதரவு கேட்டுதுண்டுப்பிரசுரம் விநியோகம் செய்ய வேண்டும். செப்டம்பர் 27 அன்று சாலை மறியல், ரயில் மறியல்போராட்டத்தில்அனைத்து தரப்பு மக்களையும் பங்குபெறச்செய்துவெற்றிகரமாக நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாலஅறவாழி, இந்தியத்தேசிய காங்கிரஸ்மாநிலச்செயலாளர் சித்தார்த்தன் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இளங்கீரன், மக்கள் அதிகாரம் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம்கான்சாகிப்பாசனவிவசாயச்சங்கத் தலைவர் கண்ணன், காஜாமைதீன்,விவசாயச்சங்கத் தலைவர்கள் குஞ்சிதபாதம்,மதிவாணன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe