Resolution to invite Annamalai University staff working in government departments to the University!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாலைக்கட்டி தெருவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி நிரவல் ஊழியர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக இணைந்தபின் முதல் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பணிநிரவல் ஊழியர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

Advertisment

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார், மாநில பொதுச்செயலாளர் பொண்ணிவளவன், மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் கலந்துக் கொண்டு அண்ணாமலை பல்கலைக் கழகப் பணிநிரவல் ஊழியர்கள் தினந்தோறும் அனுபவிக்கும் பல்வேறு விதமான இன்னல்களை எடுத்துக் கூறினார்கள்.

Advertisment

இந்த கூட்டத்தில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை ஒப்பந்த நிபந்தனைப்படி மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழக பணிக்கு அழைக்க வேண்டும். அவர்களை அண்ணாமலைக்கழக பணிக்கு அழைக்க நிதி சிக்கல் பிரச்சனையாக இருக்கும் பச்சத்தில் சுழற்சி முறையில் பணிநிரவல் செய்து, அந்த ஊழியர்களை அண்ணாமலைப் பல்கலைக் கழக பணிக்கு அழைக்க வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிதிசிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அண்ணாமலைப் பல்கலைக் கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் குமரவேல், மாநிலப் பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட பணிநிரவல் ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.