Ma Subramanian

Advertisment

தமிழ்நாடுபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத்தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத்தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. வரும் செப்.13 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு அறிவிப்புகளைத்தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வுநடைபெறவுள்ள நிலையில்நாளை மறுநாள் அதாவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின்கடைசி நாளான செப்.13 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகத்தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும்,தேவையான வலியுறுத்தல்களைக் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் எனவும்அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.