Advertisment

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு: திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு போராட்டம்

Banwarilal Purohit

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து ரயில் மூலம் சனிக்கிழமை அதிகாலை சிதம்பரத்திற்கு செல்கிறார். பின்னர் முதல் நிகழ்வாக சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமி சகஜானந்தா மணிமண்பத்திற்கு காலை 9.45 மணிக்கு சென்று சாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் 20 நிமிடம் அவரது சிலையின் அருகே தியானத்தில் ஈடுபடுகிறார். அதனை தெடர்ந்து 11 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்டு நாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குகிறார்.

Advertisment

இந்நிலையில் கவர்னர் வருக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் வர்த்தக சங்கம் நகரத்தில் சாலைகளில் புழுதி பறந்து மோசமான நிலையில் உள்ளது. சிதம்பரம் நகரத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப்பணிகள் தரமற்ற முறையில் செயல்படுகிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி வட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாமல் கொள்ளிடம் ஆறு, வெள்ளாற்றில் தடுப்பனை கட்டவேண்டும். சிதம்பரம் பகுதி மக்களின் வாழ்வாதர பிரச்சணைகள் கவர்னரின் நேரடி கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று கடையடைப்பு போராட்டம் அறிவித்து துண்டு பிரசுரத்தை அனைத்து கடைகளுக்கும் வழங்கியுள்ளது.

Advertisment

இதனை தொடர்ந்து வர்த்தக சங்கத்தின் போராட்டம் குறித்து கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் வட்டாட்சியர் ஆறுமுகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வர்த்தக சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். இதனை வர்த்தக சங்கத்தினர் புறகனித்து அறிவித்தப்படி கவர்னர் வருகையின் போது கண்டிப்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு என்ற பெயரில் பல்கலைக்கழக ஊழல் பட்டியல் இதோ நடவடிக்கைக்கு உத்திரவிட்டு உள்ளே வா என்று கவர்னர் வருகைக்கு எதிராக போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். இதனால் சிதம்பரம் நகருக்கு கவர்னர் வருகையையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் கவர்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனால் சிதம்பரம் நகரமே பரபரப்பாக உள்ளது.

- காளிதாஸ்

Resistance Governor's Visit Tomorrow Strike Struggle
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe