Skip to main content

நிலக்கரி இறக்குமதிக்கு எதிர்ப்பு- நாகூரில் மக்கள் டார்ச் லைட் போராட்டம்

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

காரைக்காலில் மார்க் துறைமுகத்தில்  நிலக்கரி இறக்குமதியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

காரைக்காலில் இயங்கிவரும் மார்க் துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அதிக அளவு அப்படியே  கொட்டிவைப்பதால் நிலக்கரி துகள்கள் காற்றில் கலக்கிறது. இதனால் நாகப்பட்டினம் நாகூரை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது என மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

 

nakai

 

 

 

nakai

 

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நாகூரில் திடீரென பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் கையில் மொபைல் டார்ச்சுடன் காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. 

 

பலமணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் பல்வேறு பேச்சுவாரத்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளாததால் குண்டுக்கட்டாக அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.    

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

“பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பேரழிவு” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Jairam Ramesh alleges Damage for small and micro businesses under Prime Minister Modi's rule

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 10 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) என்ற செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைப் பெருமைப்படுத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மற்றும் திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் MSME சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தது.

இதனை, ராகுல் காந்தி கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பேரணியின் மெகா பேரணியின் போது அவர் மீண்டும் வலியுறுத்தியது போல், மாநிலத்தின் தொழில்துறை மையமான கோவை பகுதியில் உள்ள எம்எஸ்எம்இ என்னும் மையத்தின் தவறான நிர்வாகத்தால் தத்தளிக்கின்றன. பணப்புழக்கத்தை அதிகம் நம்பியிருக்கும் கொங்குநாட்டின் MSMEகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருப்பூரில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவைத் தாங்க முடியாமல் 1,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள  எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொடுத்த இரண்டாவது அடி ஜி.எஸ்.டி ஆகும். மிக சிக்கலான வரி விதிப்பு முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை 27% லிருந்து 28% ஆகக் கண்டாலும், MSMEகள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை முந்தைய ஆட்சியை விட இரு மடங்காகக் கண்டன. 2019 ஆம் ஆண்டளவில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50,000 தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18ல் மட்டும் 5.19 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் மோசமான நிர்வாகத்தினால் கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனிமனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரிழப்பால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.