style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தஞ்சையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றுள்ள மத்திய ஆய்வுக் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
புதுக்கோட்டையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மத்திய ஆய்வுக் குழுவினர் நேற்று இரவு ஆய்வினை முடித்துக் கொண்டு தஞ்சை புறப்பட்டனர்.
அதன்படி நேற்று இரவு தஞ்சையில் தங்கிய டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழு இன்று காலை தஞ்சை, ஒரத்தநாடு புதூர், புலவன்காடு, நெமிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த சென்ற நிலையில், தஞ்சை ஒரத்தநாட்டில்ஆய்வு செய்யச் சென்ற மத்தியக் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.