/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cdm-pol-art.jpg)
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10 ஆம் அணி உளுந்தூர்பேட்டையில் காவலராக பணிபுரிந்தவர் நெய்வேலியை சேர்ந்த ஜார்ஜ் பென்னாண்டஸ் (வயது 30) ஆவார். இவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் மகனை இழந்த பெற்றோர்களுக்கு உதவி செய்யும் விதமாக 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவல்துறையினர் 6 ஆயிரத்து 255 பேர் ஒன்றிணைந்து அவர்களின் சம்பளத்தில் 19 லட்சத்து 38 ஆயிரத்து 500 நிதி திரட்டினர்.
இதனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் முன்னிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பெற்றோர் கிறிஸ்டோபர் - உன்னித மேரி ஆகியோரிடம் காசோலையாக வழங்கினார். இந்நிகழ்வில் ஆயுதப்படை ஆய்வாளர் அருட்செல்வம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார், காவல்துறையினர் முகுந்தன், மணிகண்டன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)