திருச்சி பொன்மலை கோட்டம் பெரிய மிளகுபாறை பகுதியில் வேடுவர் தெருவில் ஆழ்துளைக்கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது மின் மோட்டாருடன் கூடிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (31.05.2021) நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டியைத் திறந்துவைத்தார்.
126 அடிக்குஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, 2000 லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் 200 குடும்பங்கள் பயன்படும் வகையில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.