Skip to main content

 கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  முன்பதிவு செயல் அறைகள் நாளை தொடக்கம்

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
cmda


தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு  வசதியாக  அரசு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு செயல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

 முன்பதிவு செயல் அறைகளை நாளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் நாளை காலை 11 மணி முதல்  முன்பதிவு செயல் அறைகளில், பேருந்துகளில் செல்ல விரும்புகிறவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மாநகராட்சிக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The High Court fined the Chennai Corporation

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த அபராத தொகையான ரூ. 37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர். 

Next Story

"உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு"- சி.எம்.டி.ஏ. அறிவிப்பு!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

"Infrastructure development fee hike" - CMDA Notice!

 

சென்னையில் கட்டடங்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் மக்கள் கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு, தனிவீடுகள், வணிக ரீதியான கட்டடங்கள் அனைத்திற்கும் சி.எம்.டி.ஏ. தான் அனுமதி வழங்குகிறது. இதில், அடுக்குமாடி கட்டடங்களில் எத்தனை தளங்கள் அனுமதி வழங்குவதற்கு உட்கட்டமைப்பு கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. 2021- ஆம் ஆண்டு சதுர மீட்டருக்கு 198 ரூபாயாக வசூலிக்கப்பட்ட உட்கட்டமைப்பு கட்டணத்தை தற்போது 218 ரூபாயாக உயர்த்தி, பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது. 

 

இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், அதிகாரிகள் கூறுகின்றன. அரசின் இந்த அறிவிப்பால், 1,000 சதுர மீட்டர் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் கூடுதலாக 20,000 ரூபாய் கட்ட நேரிடும் என கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன. 

 

பொதுகட்டட விதிகளின்படி, அதிக உயரமான கட்டடம் மற்றும் உயரம் குறைவாகக் கட்டப்படும் கட்டுமானங்களை வகைப்படுத்த, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறுகின்றன.