Researcher Orisa Balu passed away

கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் காலமானார்.

ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்பட்ட கடலியல் வரலாற்று ஆய்வாளரின் இயற்பெயர் சிவ பாலசுப்ரமணி. இவருக்கு வயது 60. இவர் ஆமைகள் மூலம் நீர் வழித்தடம் குறித்தும், பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டது குறித்தும்கண்டறிந்தவர். குமரிக்கண்டம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

Advertisment

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரிசா பாலு இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். இவரின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment