Advertisment

''அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஆய்வு இருக்கை''-ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சிந்தனை செல்வன் பேட்டி!

'' Research seat in the name of the Kalaingar at Annamalai University '' - Interview with Board Member sinthanai Selvan!

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் அண்ணாமலை பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரலாற்றுப் பெருமைமிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக என்னை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு முழு கட்டுப்பாட்டில் எடுத்து 9-ஆண்டுகள் ஆகியும் அதன் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழகம் எவ்வாறு கரோனா பெரும்தொற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததோ அதேபோல் பல்கலைக்கழக நிர்வாகம் நிதி சிக்கலில் சிக்கியுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் சீரிய முயற்சியால் மீட்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Advertisment

துணைவேந்தர் நியமனம் ஆளுநரின் ஒப்புதலுக்காக உள்ளது. 7-ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைத் தனிக் கவனம் கொண்டு மீட்க வேண்டும். பல்கலைக்கழகம் 90-ஆவது ஆண்டு முடிந்து 100-வதுஆண்டை நோக்கிச் செல்கிறது. தமிழையும், இசையும் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞரின் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். அதேபோல் பௌத்தம், சமணம் குறித்த ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்குவதுபோல் இந்த பல்கலைக்கழகத்திலும் வழங்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசு நடத்தும் பல்கலைக்கழகத்தை விட இந்தியாவிலே தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தமிழக முதல்வர் மாற்ற வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இவருடன் வி.சி.க மாநில நிர்வாகி நீதிவளவன், மாவட்டச் செயலாளர் அறவாழி, செய்தித்தொடர்பாளர் திருவரசு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

aAnnamalai University kattumannaarkovil MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe