திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.

Advertisment

 Rescue work reached 62 hours on the fourth day

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பேராலயங்கள் பள்ளிவாசல்கள், கோயில்களில் சுஜித் மீண்டு வர வேண்டும் என சிறப்பு தொழுகைகள், பிரார்த்தனைகள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடுக்காட்டுபட்டியில் நடிகர் தாமு பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இந்த விபத்து குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து,

Advertisment

அரசு எந்திரத்தையோ

ஆழ்துளை எந்திரத்தையோ

குறை சொல்லும் நேரமில்லை;

குழந்தை மீட்பே குறிக்கோள்.

பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.

தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்என தெரிவித்துள்ளார்.

அதேபோல்ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 40 அடி குழி தோண்டப்பட்டுள்ளது.பாறை இருப்பதால்பணியில் சற்று தாமதம் ஏற்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நான்காவது நாளாக62 மணி நேரத்தை தாண்டியது, அதேபோல் குழிதோண்டும் பணி 24 மணிநேரத்தை கடந்துமீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

Advertisment