Advertisment

55 மணிநேரத்தை கடந்த மீட்புப்பணி... 2 வது ரிக் இயந்திரம் துளையிடும் பணியை துவங்கியது!  

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் சுஜித் என்றஇரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டதையடுத்து மீட்புப்பணிகள் 55 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

PP

காலையிலிருந்துரிக் இயந்திரம் துளையிடும்பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அதிசக்திவாய்ந்த மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு தற்பொழுது அந்த இயந்திரம் துளையிடும் பணியை மேற்கொண்டு வருகிறது. இன்றுகாலையிலிருந்து துளையிடும் பணியைமேற்கொண்ட ரிக் இயந்திரம் துளையிடும் பாகத்தை உள்ளே விட்டு வெளியே மண்ணை மற்றும் பாறை துகளை எடுத்து வருவதற்கும் 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது துளையிடும் ரிக் இயந்திரம் பத்து நிமிடத்தில் உள்ளே சென்று துளையிடும் பணியை மேற்கொண்டு மண் மற்றும் பாறை துகள்களைவெளியே கொண்டுவரும் அந்த அளவிற்கு அதிக சக்தி வாய்ந்த இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

MM

Advertisment

சம்பவ இடத்தில் மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அங்கே குழுமி உள்ளனர்.

Rescue surjith thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe