25 அடி ஆழம் கொண்ட உறைகிணற்றுக்குள் 65 வயது மூதாட்டி ஒருவர் தவறி விழுந்த நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் சென்னை நெற்குன்றம் அருகே நிகழ்ந்துள்ளது.
நெற்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற 65 வயது மூதாட்டி கவனக்குறைவு காரணமாக நான்கு அடி விட்டம், 25 அடி ஆழமும் கொண்ட உறைகிணற்றில் தவறி விழுந்தார். உடனடியாகத்தீயணைப்புத்துறைக்குத்தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் பல மணி நேரம் போராடி கயிறு மூலமாக இறங்கி மூதாட்டி லட்சுமியை மீட்டனர்.