the rescue department involved in searching snake and Back

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கருவூல மையத்தின் பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பின் தோல்கள் கிடந்துள்ளன. இதனைக் கண்ட மைய பணியாளர்கள் அலுவலக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த மீட்புபணித் துறையினர் பாம்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பாம்பு தென்படாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

Advertisment

அந்த அலுவலகம் நீண்ட நாட்களாகத் தூசடைந்து காணப்படுவதால் இது போன்ற உயிரிகள் வரக்கூடும் என்றும் எனவே அறையைத் தூய்மை செய்யும்படியும் மீட்புபணித் துறையினர் தெரிவித்துள்ளனர். பல மக்கள் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தப் பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும். கிடைத்த பாம்பின் தோல்கள் நல்ல பாம்பின் தோல்கள் என மீட்புபணித் துறையினர் தெரிவித்தனர்.

Advertisment