திருச்சியில் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை மீட்புப்படையினர் போராடி மீட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள பெருவளப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த பகுதியிலிருந்து 50 அடி ஆழம் கொண்ட வற்றிய கிணற்றில் விழுந்தார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் வயலுக்குச் செல்லும் பொழுது கிணற்றில் காலிடறி உள்ளே விழுந்துள்ளார். பெண்ணின் சத்தத்தைவிட்டு அக்கம்பக்கத்தினர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கயிறு மூலம் கல்லூரி மாணவியை கட்டி மேலே கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.