Advertisment

இறைச்சிக் கடையில் குழந்தை தொழிலாளர் சிறுவன் மீட்பு

Rescue of child labor boy in butcher shop

இறைச்சிக் கடையில் குழந்தை தொழிலாளியாகசிறுவன் அமர்த்தப்பட்ட நிலையில், குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ஈரோடு சூளை பாரதி நகரில் சத்தியமங்கலம் பிரதான சாலையில் உள்ள கறிக் கடையில், சிறுவன் பணியில் இருப்பதாக 1098 என்ற குழந்தைகள் ஹெல்ப் லைன் எண்ணிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் 14 வயது நிரம்பாத சிறுவன் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisment

விசாரணையில் 6ம் வகுப்பு வரை மட்டுமே பயின்று பள்ளியிலிருந்து இடைநின்ற சிறுவன், பல மாதங்களாக இறைச்சிக் கடையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தது உறுதியானது. இதையடுத்து சிறுவனை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு அழைத்துச் சென்றனர். சிறுவனை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

incident Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe